SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் சாகுபடி செய்யும் பரப்புக்கு ஏற்ப விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்

2022-09-27@ 00:57:46

சென்னை: சாகுபடி செய்யும் பரப்பளவுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு தமிழக அரசு, கூட்டுறவு வங்கி கடன் வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையில் இந்த ஆண்டு வழக்கமாக திறக்கப்படும் தேதிக்கு முன்னரே குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், விவசாயிகள் எத்தனை ஏக்கரில் விவசாயம் செய்கிறார்களோ, அத்தனை ஏக்கருக்கும் கடன் கொடுக்க வேண்டும். மேலும் விவசாய நிலங்கள் அதிகரிப்பிற்கு ஏற்ப அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான அளவு, விவசாயிகளுக்கு சிரமம் இல்லாமல் அனைத்து இடங்களிலும் திறக்க வேண்டும். மழைக்காலமாக இருப்பதால், நெல் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சிமென்ட் களம் அமைத்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்களை பாதுகாக்கவும், நெல் மூட்டைகள் நனையாமல் இருப்பதற்கு தேவையான தார்பாய்களை வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

  • fredddyyy326

    தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!

  • dubai-helipad

    துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்