கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
2022-09-27@ 00:41:27

சென்னை: தமிழக பகுதிகளின்மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 23 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 14 மாவட்டங்களில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. சென்னை நகரில் மந்தைவெளி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, நங்கநல்லூர், வட சென்னையில் சில இடங்கள் என மழை பெய்தது. நேற்றைய மழையில் அதிகபட்சமாக திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் 170 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கைக்கு தெற்கே உள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 கிமீ முதல் 60 கிமீ வேகத்தில் இன்று வீசும். இதே நிலை 29ம் தேதி வரை நீடிக்கும் என்பதால், மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
Tags:
Downward circulation rainfall in Tamil Nadu Meteorological Centre கீழடுக்கு சுழற்சி தமிழகத்தில் மழை வானிலை ஆய்வு மையம்மேலும் செய்திகள்
மின் வேலியில் சிக்கி யானைகள் பலியாகும் விவகாரத்தில் அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: காவல்துறை ஐகோர்ட்டில் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!