பாலக்காட்டில் பெட்ரோல், காஸ் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டி பேரணி
2022-09-26@ 13:58:22

பாலக்காடு : பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சித்தூர் தாலுகா இளைஞர் காங்கிரசார், விவசாயிகள் மாட்டு வண்டி பேரணி சென்றனர்.பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையில் பெட்ரோல், டீசல், காஸ் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சித்தூர் தாலுகா இளைஞர் காங்கிரசார் மற்றும் விவசாயிகள் மாட்டு வண்டி பேரணி நேற்று நடத்தினர்.
இப்பேரணியை கொழிஞ்சாம்பாறையில் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் தணிகாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சித்தூர் தொகுதி காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஷபீக் தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல், காஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இவற்றை மத்திய, மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டி பேரணி நடத்தினர். பேரணி கொழிஞ்சாம்பாறை முதல் கம்பிளச்சுங்கம் வரை நேற்று நடைபெற்றது. மேலும், ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பிரசாரம் செய்தனர்.
இதில், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலர்கள் சாஜன், பிரியங்கா, தொகுதி துணை தலைவர்கள் சுரேஷ், சனாதன், முருகேஷ், ஸ்ரீனிவாஸ், ஷாகுல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டனர்..வட்டாரப் பொறுப்பாளர்கள் ஜித்தின், மனு, வருண், சம்சாத் பானு, வட்டாரத் தலைவர் ராஜுநாத், சதானந்தன் இளைஞர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் அனிஷ், தாமஸ் லெனோ, கிருதில், சுனில்குமார், வத்சன், பெரோஸ்கான் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!