2வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது
2022-09-26@ 03:14:41

சென்னை: நியூசிலாந்து ஏ அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் (அதிகாரப்பூர்வமற்றது), 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஏ அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து ஏ அணி 47 ஓவரில் 219 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஜோ கார்ட்டர் 72 ரன் (80 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ரச்சின் ரவிந்திரா 61 ரன் (65 பந்து, 9 பவுண்டரி), ஷான் சோலியா 28 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.
இந்தியா ஏ பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 10 ஓவரில் 51 ரன் விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட் வீழ்த்தினார். ராகுல் சஹார், ரிஷி தவான் தலா 2, உம்ரான் மாலிக், ராஜ் பவா தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 50 ஓவரில் 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ களமிறங்கியது. ருதுராஜ் 30, ரஜத் பத்திதர் 20 ரன்னில் வெளியேற, பிரித்வி ஷா அதிரடியாக 77 ரன் (48 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 37 ரன் எடுக்க... ராஜ் பவா, திலக் வர்மா டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.
இந்தியா ஏ அணி 26 ஓவரில் 180 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து சரிவை சந்தித்த நிலையில், ரிஷி தவான் - ஷர்துல் தாகூர் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டனர். இந்தியா ஏ 34 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்து வென்றது. ரிஷி 22 ரன், ஷர்துல் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. ஏ பந்துவீச்சில் லோகன் வான் பீக் 3, ஜேக்கப் டஃபி 2, ஜோ வாக்கர் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி சென்னையில் நாளை நடக்கிறது.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
கடைசி ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - ஆஸி. சென்னையில் பலப்பரீட்சை: தொடரை வெல்லப்போவது யார்?
கிரிக்கெட் வழியே நட்புறவு...
விராட் கோலி நேரில் வந்து கேட்டுக்கொண்டதால் தான் 2017ல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன்: மனம் திறந்த சேவாக்
சூர்யகுமார் யாதவ் பயிற்சியாளருடன் ஆலோசிக்க வேண்டும்: கவாஸ்கர் பேட்டி
பேட்ஸ்மேன்களை மிரட்டும் வேகமுடையவர் உம்ரான்: இஷாந்த்-பிரெட்லீ பாராட்டு
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!