SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 3.40 கோடி பேர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

2022-09-25@ 15:03:33

சென்னை: தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 926 பேர். இதுவரை 86 லட்சத்து 31 ஆயிரத்து 976 பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இன்னும் 3 கோடியே 40 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்யடிவர்கள் உள்ளனர்' என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் 38-வது மெகா தடுப்பூசி முகாமை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 90 லட்சமாவது பயனாளியைச் சந்தித்து அவருக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கினார். ஒன்றிய அரசின் அறிவிப்பின்படி பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் ரூ.386.25 ரூபாய் கட்டணம் செலுத்தி போட்டுக்கொண்டிருந்த நிலையில், அண்மையில் பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம் என்ற அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு வந்த நாளிலிருந்தே தொடர்ந்து வாரந்தோறும் இந்த தடுப்பூசி மெகா முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்திக்கொள்வதற்கு 4 முதல் 5 நாட்கள் வரை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். நாளை முதல் முதல் செப்.30 வரை சுகாதார துறையின் 11,333 மருத்துவக் கட்டமைப்புகளிலும் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 926 பேர். இதுவரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 86 லட்சத்து 31 ஆயிரத்து 976 பேர். இன்னும் 3 கோடியே 40 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்யடிவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

ஒன்றிய அரசின் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுக்கி விழுகிற இடங்களில் எல்லாம் தடுப்பூசி முகாம்கள் என்கிற வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடுகிற பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இதை பொதுமக்கள் பயன்படுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்