SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி: தமிழ்நாடு அரசு உத்தரவு

2022-09-25@ 11:46:14

சென்னை: காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி தெரிவித்துள்ளது. காந்தி ஜெயந்தி வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கிராம சபை கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி வருகின்ற ஆக்டொபர் 2-ஆம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டுள்ளது.

குறைவெண் வரம்பின் படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, வட கிழக்கு பருவமழை, கொசுக்கள் மூலம் டெங்கு பரவுதலை தடுக்கும் வகையில் விவாதித்தல் உள்ளிட்டவை குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

100 நாள் வேலை திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கணக்கெடுப்பு பணிகள் குறித்து விவாதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டம் குறித்து அறிக்கையை ஆக்டொபர் 12-ம் தேதிக்குள் அனுப்ப அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்