சட்டப்பேரவை அலுவல் என்ன? இதுவரைக்கும் யாரும் இப்படி கேட்டதில்லை: ஆளுநர் மீது மான் பாய்ச்சல்
2022-09-25@ 00:42:52

புதுடெல்லி: ‘சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக அதன் அலுவல்கள் என்ன என்பது குறித்து 75 ஆண்டுகளில் எந்த ஜனாதிபதியும், ஆளுநரும் கேட்டதில்லை,’ என்று பஞ்சாப் ஆளுநரை முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி, ஆட்சி கவிழ்க்க பாஜ முயல்வதாக, இக்கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றம்சாட்டினார். இதனால், பஞ்சாப் சட்டப்பேரவையை கடந்த 22ம் தேதி கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். இதற்காக, சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்டுவதற்கு முதலில் அனுமதி அளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வரும் 27ம் தேதி பேரவையை மீண்டும் கூட்டுவதற்கு ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. இதில் விவாதிக்கப்பட உள்ள அம்சங்கள் என்ன? என்று மாநில அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பேரவை கூட்டம் கூடுவதற்கு முன், அதன் அலுவல்கள் என்ன என்பது குறித்து கடந்த 75 ஆண்டுகளில் எந்த ஜனாதிபதியும், ஆளுநரும் கேட்டது இல்லை. இனிமேல், எம்எல்ஏ.க்கள் பேச உள்ளதற்கும் தன்னிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று ஆளுநர் கூறுவார். இது மிகவும் அதிகம்...’ என்று கூறியுள்ளார். அதே நேரம் மானுக்கு ஆளுநர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘அரசியல் சட்டம் 167, 168வது பிரிவுகளை பற்றி, முதல்வருக்கு அவருடைய சட்ட ஆலோசகர்கள் போதிய ஆலோசனைகளை அளிப்பது இல்லை என தெரிகிறது,’ என்று கண்டித்துள்ளார். இதனால், ஆளுநர் - முதல்வர் மோதல் நாளுக்கு நாள் முற்றி வருகிறது.
Tags:
What is the function of legislature? Governor Deer Leap சட்டப்பேரவை அலுவல் என்ன? ஆளுநர் மான் பாய்ச்சல்மேலும் செய்திகள்
கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்
தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது: பிரதமர் மோடி ட்வீட்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை தொடங்கியது.! தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ‘பிஎப்ஐ’ மீதான தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை
டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!