SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.167 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்

2022-09-25@ 00:23:49

அய்சால்: மியான்மர் எல்லையில் ரூ.167.86 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை அசாம் ரைபிள்ஸ், மிசோரம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மியான்மர் எல்லையில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, மிசோரம் போலீசாரும் அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து நேற்று முன்தினம் மியான்மர் எல்லை அருகே உள்ள சம்பாய் மாவட்டத்தின் மெல்பக் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாகனத்தை நிறுத்தி வீரர்கள் சோதனை செய்தனர். அதில், 5 லட்சம் மெத்தபென்டமைன் என்ற போதை மருந்து மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. 55.80 கிலோ எடை கொண்ட இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.167.86 கோடி. இது தொடர்பாக பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் எல்லையில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.200 கோடி மதிப்புள்ள இதுபோன்ற போதை மாத்திரகைள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை விருந்துகளில் இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்