பிழைப்பார் என ஒன்றரை ஆண்டாக கணவர் சடலத்தை பாதுகாத்த மனைவி
2022-09-25@ 00:22:15

கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் இறந்த கணவரின் உடலை, ஒன்றரை ஆண்டுகளாக வீட்டில் மனைவி பாதுகாத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்தவர் விம்லேஷ் தீட்சத். வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்தாண்டு ஏப்ரலில், உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் இறந்தார். அவருடைய உடலை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர், அதை தகனம் செய்யவில்லை. விம்லேஷ் கோமாவில் இருப்பதாகவும், திரும்ப வருவார் என்றும் நம்பினர். அவருடைய மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர்.
இறந்த கணவரின் சடலத்தின் மீது தினமும் கங்கை நீரை தெளித்து வந்துள்ளார். அவருடைய குடும்பத்தினரும் அவ்வப்போது ஆக்சிஜன் சிலிண்டரை வாங்கி வந்து பொருத்தி உள்ளனர். விம்லேஷ் கோமாவில் இருப்பதாக அண்டை வீட்டினரையும் நம்ப வைத்துள்ளனர். இந்நிலையில், விம்லேஷின் ஓய்வூதிய கோப்புக்கள் அப்படியே இருந்ததால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். மருத்துவ அதிகாரிகள், போலீசார் மற்றும் கலெக்டர் உள்ளிட்டோர் விம்லேஷ் வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்று ஆய்வு செய்தனர். அங்கு அழுகிய நிலையில் இருந்த விம்லேஷ் சடலத்தை கண்டு அதிர்ந்தனர். பின்னர், விம்லேஷ் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
Tags:
Survived for a year and a half husband dead wife protected பிழைப்பார் ஒன்றரை ஆண்டாக கணவர் சடல பாதுகாத்த மனைவிமேலும் செய்திகள்
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை
டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
திருப்பதி அருகே போலீஸ் ரோந்து வனப்பகுதியில் வெட்டி கடத்திய 9 செம்மரக்கட்டைகள் பறிமுதல்
மகளிர் பிரீமியர் லீக்: எலிமினேட்டர் போட்டியில் 24ம் தேதி மும்பை-உபி வாரியர்ஸ் மோதல்.! முதலிடம் பிடித்த டெல்லி நேரடியாக பைனலுக்கு தகுதி
டெல்லி அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் கைலாஷ் கெலாட்
இந்தியாவில் மீண்டும் ஆயிரத்தை தொட்ட கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!