8 சிறுத்தைகளை வனத்தில் விடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருகைக்காக 300 மரங்கள் வெட்டப்பட்டதா?... மத்திய பிரதேச வனத்துறை விளக்கம்
2022-09-24@ 17:27:31

போபால்: மத்திய பிரதேச வனப்பகுதியில் 8 சிறுத்தைகள் விடப்பட்ட நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி வருகைக்காக 300 மரங்கள் வெட்டப்பட்டதாக வெளியான செய்தியை அம்மாநில வனத்துறை மறுத்துள்ளது. பிரதமர் மோடி தனது பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதியன்று மத்திய பிரதேச மாநிலம் குனோ வனவிலங்குகள் சரணாலயத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர், நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகளை, அந்த சரணாலயத்தில் விடுவித்தார்.
முன்னதாக பிரதமர் மோடி மற்றும் சுமார் 300 சிறப்பு விருந்தினர்களின் வருகைக்காகவும், ஹெலிபேடு அமைப்பதற்காகவும் வனப்பகுதியில் இருந்த 300க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய பிரதேச வனத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘குனோவில் ஹெலிபேட் அமைப்பதற்காக எந்த மரமும் வெட்டப்படவில்லை.
ஹெலிபேடுக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மரங்கள் இல்லை; மரங்கள் வெட்டப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் போலியானது. விருந்தினர்கள் தங்குவதற்காக கூடாரங்கள் ஏதும் அமைக்கவில்லை. விருந்தினர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் செசாய்புரா மற்றும் சுற்றுலா ஜங்கிள் லாட்ஜில் தங்கியிருந்தனர். குனோ தேசிய பூங்காவில் கூடாரங்கள் ஏதும் அமைக்கப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
8 சிறுத்தைகளை வனத்தில் விடும் நிகழ்ச்சி பிரதமர் மோடி 300 மரங்கள் வெட்டப்பட்டதா? மத்திய பிரதேச வனத்துறைமேலும் செய்திகள்
கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்
தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது: பிரதமர் மோடி ட்வீட்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை தொடங்கியது.! தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ‘பிஎப்ஐ’ மீதான தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை
டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!