SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புழல் பகுதிகளில் உள்ள தெரு பெயர் பலகை உடைப்பு

2022-09-24@ 15:21:10

புழல்: புழல், காவாங்கரை, கன்னடபாளையம், கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், கலெக்டர் நகர், புத்தகரம், சூரப்பட்டு, சண்முகபுரம், லட்சுமிபுரம், ரெட்டேரி, கடப்பா சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரும்பு பைப்பிலான நவீன தெரு பெயர் பலகைகள் பொருத்தப்பட்டன. நாளடைவில் சிலர், இந்த தெரு பலகைகளில் போஸ்டர் ஒட்டியும் உடைத்தும் நாசமாக்கினர். தற்போது மேற்கண்ட வார்டு பகுதிகளில் உள்ள அனைத்து தெரு பெயர் பலகைகளும் காணாமல் போய்விட்டன.

இதனால் இப்பகுதிக்கு புதிதாக வருபவர்கள் மற்றும் தபால்துறை ஊழியர்கள், தாங்கள் செல்ல வேண்டிய தெருக்களை அறிய முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த தெரு பலகைகளை சீரமைக்கும்படி மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் தாமதப்படுத்துகின்றனர். எனவே, காணாமல் போன தெரு பலகைகளை மீண்டும் பொருத்தி சீரமைக்க மாநகராட்சி உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்