SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்மிடி. எளாவூர் சோதனைசாவடியில் அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய பெண் கைது; 15 கிலோ பறிமுதல்

2022-09-24@ 15:16:01

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைசாவடியில் சிப்காட் போலீசார் நேற்று மாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்சை மடக்கி, பயணிகளிடம் சோதனை நடத்தினர். இதில், ஆந்திராவை சேர்ந்த கீதா (55) என்பவர் 15 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கீதாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் பின்னணியில் உள்ளவர்கள் யார், யார் உள்ளனர் என போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்