கடம்பத்துார் திரவுபதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா: 26ம் தேதி முதல் அக்.4 ம் தேதி வரை நடைபெற உள்ளது
2022-09-24@ 02:36:06

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் நவராத்திரி பெருவிழா வரும் 26ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு 9 நாட்களும் அம்மன் பல்வேறு அலங்காரத்திலும் மூலவர் பல்வேறு காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி வருகின்ற 26ம் தேதி ஆதி பராசக்தி மஞ்சள் காப்பு நிகழ்ச்சியும், 27ம் தேதி மீனாட்சி குங்குமம் காப்பும், 28 ந் தேதி ராஜேஸ்வரிக்கு சிகப்பு குங்குமம் காப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
அதே போல் 29 ந் தேதி மகாலட்சுமி சந்தனகாப்பும், 30ம் தேதி மாவடி பச்சை குங்கும காப்பும், அக்டோபர் 1ம் தேதி சரஸ்வதி மாவு காப்பும், 2ம் தேதி அன்னபூரணி ரோஸ் குங்குமம் காப்பும், 3ம் தேதி இரத சாரதிக்கு வெள்ளி கவசம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவின் கடைசி நாளான மகிஷாசூரமர்தினிக்கு மஞ்சள் காப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 5ம் தேதி விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு அன்று காலை 9 மணியளவில் சிறப்பு அபிேஷகமும், ஆராதனையும் , வருகின்ற அக்டோபர் 9 ம் தேதி அம்மன் அலங்காரம் விடையாத்தி - சந்தனகாப்பு நிகழ்ச்சியும் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நாளை மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
10,000 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி