SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 14-ம் தேதி முதல் முதல் 20-ம் தேதி வரை சாலையில் சுற்றிதிரிந்த 229 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.3.54 லட்சம் அபராதம் விதிப்பு

2022-09-23@ 19:24:05

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14.09.2022 முதல் 20.09.2022 வரை மொத்தம் 229  மாடுகள்  பிடிக்கப்பட்டு  உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550/- வீதம் ரூ.3,54,950/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி  பொது சுகாதாரத்துறையினரால்  கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை  மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. அவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு  அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550/- விதிக்கப்படுகிறது.

அதன்படி, மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர், அதனை மாட்டுத் தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்து செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்து கொள்ள வேண்டும்.  

மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் கூடுதலாக 10 நபர்கள் நியமித்து காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் 14.09.2022 முதல் 20.09.2022 வரை மொத்தம் 229  மாடுகள் பிடிக்கப்பட்டு  உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550/- வீதம் ரூ.3,54,950/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



மண்டலவாரியாக 14.09.2022 முதல் 20.09.2022 முதல் பிடிக்கப்பட்ட மாடுகள் விவரம்

வ.எண்    மண்டலம்    எண்ணிக்கை    
1    திருவொற்றியூர்    12    
2    மணலி                      12    
3    மாதவரம்            15    
4    தண்டையார்பேட்டை    10    
5    இராயபுரம்    18    
6    திரு.வி.க.நகர்    10    
7    அம்பத்தூர்    13    
8    அண்ணாநகர்    14    
9    தேனாம்பேட்டை    28    
10    கோடம்பாக்கம்    16    
11    வளசரவாக்கம்    10    
12    ஆலந்தூர்                     12    
13    அடையாறு    20    
14    பெருங்குடி    19    
15    சோழிங்கநல்லூர்    20    
    மொத்தம்                   229    

எனவே, உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைக்க வேண்டும்.  பொது வெளியில் திரிய விடக் கூடாது.  மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம் செய்யும்போது அந்த இடங்கள் குறித்து முன்கூட்டியே அந்தந்த மண்டல நல அலவலர்களின் அனுமதி பெற வேண்டும். மீறி மாடுகளை பொது வெளியில் விடும் பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் 1960 பிரிவு 11 (1) உட்பிரிவு (h) (i) & (j)-ன் படி அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்