SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசிரியர் தகுதித் தேர்வு அக்.14 முதல் 20-ம் தேதி வரை இருவேளைகளிலும் நடைபெறும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ..

2022-09-23@ 19:01:12

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு அக்.14 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கால அட்டவணை, அனுமதி சீட்டு வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் அக்.14 முதல் 20-ம் தேதி வரை இருவேளைகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட கூடிய இந்த தகுதி தேர்வானது 2 முறை நிர்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த தேர்வுகள் நடத்தும் தேதியானது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த அறிவிக்கை என்பது 07.03.2020 அன்று வெளியிடபட்டிருந்தது.

அதன் பின்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி நிர்வாகம் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகளானது தற்பொழுது அக்.14 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிவிப்புகள், கூடுதல் தகவல்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே அறிவிக்கப்பட்டதான் படி செப்.10 முதல் 12-ம் தேதி வரை நடத்தப்படுவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் இது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட தற்பொழுது அக்டோபர் மாதம் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் இரு வேலைகளில் இந்த தேர்வானது நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணினி வழி தேர்வுக்காக பயிற்சி பெற விரும்பும் தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அனைத்து வேளை நாட்களிலும் இந்த நடைபெறும் இந்த பயிற்சியை பயன்படுத்திக்கொள்ளுமாறும், தேர்வுக்கான அனுமதி சீட்டு அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்