SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரில் இருந்து வீசிய கும்பல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி 2 கிமீ நிர்வாண நடை: அதிர்ச்சி வீடியோ வெளியீடு

2022-09-23@ 00:19:27

மொரதாபாத்: உபி.யில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி 2 கிலோ மீட்டர் தூரம் நிர்வாணமாக நடந்து சென்ற வீடியோ  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம், மொரதாபாத்தில் 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. மேலும், நிர்வாணமாக சாலையில் அவளை 2 கிமீ நடக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து 15 நாட்களுக்கு பிறகு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், சிறுமி ரத்தம் கொட்டிய நிலையில், சாலையில் நிர்வாணமாக 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்கிறார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் அவரை நிர்வாணமாக காரில் இருந்து தூக்கி வீசி உள்ளனர்.

சிறுமி உதவியற்ற நிலையில் அதிர்ச்சியுடன், சாலையில் நிர்வாணமாக நடந்து சென்று உள்ளார். ஆனால் சாலையில் சென்றவர்கள் யாரும் உதவாமல் வேடிக்கை பார்த்து உள்ளனர். சிறுமியின் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘சிறுமி ரத்த காயத்துடன் வந்தார். அவருக்கு நடந்த கொடுமையை விவரித்தார். பின்னர் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. செப்டம்பர் 7 ம் தேதி வழக்கு பதிவு  செய்த பின்னர் போலீசார் ஒருவனை கைது செய்துள்ளனர்’’ என்றனர். போலீஸ் அதிகாரி கூறும்போது,‘‘இந்த சம்பவம் தொடர்பாக நவுசே அலி என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்