முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தொடர்புடைய வழக்கு இறுதி விசாரணை அக்.12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
2022-09-22@ 16:39:42

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்து குவிப்பு வழக்குகளை ரத்து
செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவித்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் மற்றும் வழக்கறிஞர் மோகன் ஆகியோர் 2018-ல் டெண்டர் முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது முதல் வழக்கு. இதையடுத்து, மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3 வது இடம்: மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் தகவல்
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநருக்கு இன்று அனுப்பி வைப்பு
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை நாடாளுமன்றம் தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை: வைகோ கண்டனம்!
உடன்குடி பணியாளர் தற்கொலை சம்பவத்தில் வழக்கு பதிவு, விஷவாயு தாக்கி உயிரிழப்பது தடுக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!
பரத நாட்டிய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதா? தனியார் அறக்கட்டளை இயக்குநர் டிஜிபியிடம் விளக்கம்: தேசிய மகளிர் ஆணையம் புகாரால் பரபரப்பு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!