SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் ஒராண்டு நிறைவு விழா!!

2022-09-22@ 16:35:49

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமானது கடந்த 28.09.2021 அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்ட நாள் முதல் இந்த ஓர் ஆண்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல் உயர் அதிகாரிகள், வெளிநாட்டவர்கள், பல்வேறு திரைத்துறையினர் மற்றும் தமிழக காவல்துறை, நீதித்துறை, ஆட்சிப்பணி உயர் அதிகாரிகள், காவல் சிறார் மன்ற மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பட்ட பார்வையாளர்கள் என மொத்தம் 30,285 பார்வையாளர்கள் காவல் அருங்காட்சியகத்திற்கு நேரில் வருகை புரிந்து பார்வையிட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் காவல் வாத்தியக் குழுவின் இசை நிகழ்ச்சி, காவல் மோப்பநாய் கண்காட்சி, காவல் குதிரை கண்காட்சி, சிலம்பம், மைம் கூத்து, பொம்மலாட்டம், வினாடி வினா நிகழ்ச்சி, தோட்டக்கலை பயிற்சி, மரபு நடை நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம், தற்கொலை தடுப்பு, மாசு கட்டுப்பாடு போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
     
காவல் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டு ஓராண்டு நிறைவு நாளினையொட்டி 28.09.2022 அன்று ஒருநாள் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 14.09.2022 முதல் 26.09.2022 வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, விவாதமேடை, மாறுவேடப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.    

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு ஒரு வருட நிறைவு நாளான வருகிற 28.09.2022 அன்று எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் காலை 11.00 மணியளவில் காவல் வாத்தியக்குழுவின் இசை நிகழ்ச்சியும், மாலை 3.00 மணியளவில் மோப்பநாய் கண்காட்சியும் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து மாலை 5.00 மணியளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்க உள்ளனர். நிகழ்ச்சியின் இறுதியாக “On the streets of Chennai' குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

  • eqqperr1

    ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்