சென்னை விமான நிலையத்தில் துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்: 2 பேர் கைது
2022-09-22@ 14:42:24

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து நேற்றிரவு துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய 2 பயணிகளிடம் இருந்து ரூ.37.39 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏர்இந்தியா விமானம் நேற்றிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தயார்நிலையில் நின்றிருந்தது. அதில் செல்லவேண்டிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்து, அவர்களை விமானத்துக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த சையத் இப்ராஹிம் (30), அக்பர் (26) என்ற 2 பயணிகளின்மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இருவரையும் தனியறைக்கு கொண்டு சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், அவர்கள் இருவரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ஏராளமான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.
அந்த நோட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் எண்ணி பார்த்தபோது, ரூ.37.39 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் மற்றும் யூரோ கரன்சிகள் எனத் தெரியவந்தது. அந்த வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். அவர்களின் துபாய் பயணத்தை ரத்து செய்து, இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு வலை
பலாத்காரம் செய்து ஆசிரியை கொலை ஏரிக்கரையில் நிர்வாணமாக புதைப்பு: 20 நாளுக்கு பிறகு ஆட்டோ டிரைவர் கைது
பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை
வேளச்சேரி தனியார் விடுதியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி