பெரும்பாறை அருகேயுள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை: வனத்துறை எச்சரிக்கை
2022-09-22@ 12:49:44

பட்டிவீரன்பட்டி: பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். தாண்டிக்குடி அருகேயுள்ள பெரும்பாறை புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் மலைப்பகுதியில் கொட்டிய தொடர் கனமழை காரணமாக தண்ணீர் அதிகளவில் விழுகின்றது. மேலும் பெரும்பாறை, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு மற்றும் இதனைச் சுற்றியுள்ள மலைக் கிராம பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீர் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் புல்லாவெளி நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
பெரும்பாறை அருகேயுள்ள மஞ்சள்பரப்பு என்ற இடத்திலிருந்து 300 அடி தூரத்தில் இந்த அருவி உள்ளது. இந்த அருவி விழும் பகுதி 300 அடி பள்ளத்தாக்கு நிறைந்த ஆபத்தான பகுதியாகும். இந்த அருவி சுற்றிலும் மலைகள் சூழ்ந்து சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்நிலையில் இந்த அருவியில் தண்ணீர் விழும் பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாகும். போதிய பாதை வசதி இல்லாததாலும், பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளதாலும் இந்த அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து பலியாவது தொடர் கதையாகி வருகின்றது.
இம்மாதம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த என்ஜீனியர் தவறி விழுந்து பலியானார். இவரது உடல் 5 நாட்களுக்கு பின்பு மீட்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற காரணத்தினால் வனத்துறை சார்பில் அருவியின் நுழைவு பகுதியில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் கோவை குணா மறைவு
பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை
பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!