தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கப்பட்டதால் மாற்று இடம் வழங்க வேண்டும்: கலெக்டரிடம் குடியிருப்புவாசிகள் மனு
2022-09-20@ 03:51:14

காஞ்சிபுரம்: விஆர்பி சத்திரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கப்பட்டதால் மாற்று இடம் வழங்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 11வது வார்டு விஆர்பி சத்திரம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், சுமார் 60க்கும் மேற்பட்ட வீடுகள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு வேறு எந்த நிலங்களும் இல்லாத காரணத்தால் தற்போது இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.
மேற்படி இடத்தை எடுக்கும் பட்சத்தில் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள வேறு இடத்தில் மாற்று இடம் வழங்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் நேற்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். தற்போது, இதனால் பள்ளிகள் படிப்பு தடைபடக்கூடாது, தொழில் சார்ந்த வேலைகள் பாதிப்பட கூடாது என்ற நிலையில் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என்றும் உரிய மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறி உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
மின் வேலியில் சிக்கி யானைகள் பலியாகும் விவகாரத்தில் அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: காவல்துறை ஐகோர்ட்டில் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!