நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தல்
2022-09-20@ 03:24:00

திருத்தணி: திருத்தணி ஆறுமுகசுவாமி கோயில் பகுதியில் திருத்தணி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 2000க்கும் மேற்பட்டவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருத்தணி நகரை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்துநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, கூடுதல் மருத்துவர் நியமிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
திருத்தணி அரசு பொது மருத்துவமனை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் முதியவர்கள் அதிக அளவில் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்களில் காயம் அடையும் பலர், திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகின்றனர். தமிழக அரசு, ஏற்கனவே இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக செயலாற்றி வருகிறது.
அந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அனைத்து கிராமங்களிலும் சர்க்கரை, ரத்த கொதிப்பு மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டால் அரசு மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக குறையும். நோயாளிகளுக்கு அலைச்சலும் குறையும். எனவே இவ்விஷயத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து கிராமங்களுக்கும் இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை கொண்டு செல்லவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் நோயாளிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மின் வேலியில் சிக்கி யானைகள் பலியாகும் விவகாரத்தில் அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: காவல்துறை ஐகோர்ட்டில் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!