ஐ.நா சபைக் கூட்டம்: ஒன்றிய அமைச்சர் குழு நியூயார்க் பயணம்
2022-09-19@ 16:42:58

புதுடெல்லி: ஐ.நா சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு நியூயார்க் சென்றுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று ெதாடங்கி வரும் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு அங்கு சென்றுள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஒன்றிய வெளியுறவு ஜெய்சங்கர், ஜி 4 நாடுகளின் (இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி) அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விரிவான சீர்திருத்தம் கொண்டு வருதல் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகியோரை இந்திய வெளியுறவு அமைச்சர் சந்தித்து பேச உள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 24ம் தேதி உரையாற்றுவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் வந்தடைந்தார். அவரை, ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் மற்றும் நியூயார்க் தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் செய்திகள்
எங்கு சென்றாலும் சரக்கு கிடைக்கவில்லை; பீகார் முதல்வர் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம்!.. குஜராத்தில் இருந்து போதை ஆசாமி மிரட்டல்
திருப்பதி மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை: பக்தர்கள் அதிர்ச்சி
ராகுல் விஷயத்தில் ஒருங்கிணையும் எதிர்கட்சிகள்; காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணியா?.. கெஜ்ரிவால் கருத்தால் டெல்லியில் பரபரப்பு
கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
இன்று அதிகாலை ராஜஸ்தான், அருணாச்சலில் நிலநடுக்கம்
டெல்லி ராஜ்காட்டில் சத்தியாகிரக போராட்டம் எங்கள் குடும்பத்தை தொடர்ந்து அவமானப்படுத்துகிறீர்கள்!.. 32 ஆண்டுக்கு முன் நடந்ததை கூறி பிரியங்கா காந்தி உருக்கம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி