SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யகோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு: சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

2022-09-19@ 13:06:41

சென்னை: தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யகோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில் நாளை விசாரணை செய்யப்பட உள்ளதாக பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன.

அதன்பிறகு ஆட்சி மாற்றத்திற்குப் பின், சென்னை மற்றும் கோவையில் தலா ஒரு வழக்கு என 2021-2022-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டன. அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மனுவை விசாரித்த நீதிபதிகள், வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை இரு நீதிபதிகள் அமர்வே விசாரிக்கலாம் என்றும், ஒன்றிய அரசு அனுமதி வழங்கிய அனுமதி திரும்பப் பெறப்படாததால் வழக்கறிஞர் ராஜு ஆஜராகலாம் என்றும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால், பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதிகள் நாளை வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்