துலீப் கோப்பை கிரிக்கெட்: பைனலில் தெற்கு, மேற்கு
2022-09-19@ 01:53:23

கோவை: துலீப் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பைனலில் விளையாட தெற்கு, மேற்கு மண்டல அணிகள் தகுதி பெற்றன. கோவையில் நடந்த முதல் அரையிறுதியில் மத்திய மண்டல அணியுடன் மோதிய மேற்கு மண்டலம் 279 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. முதல் இன்னிங்சில் மேற்கு மண்டலம் 257 ரன், மத்திய மண்டலம் 128 ரன் எடுத்தன. 2வது இன்னிங்சில் மேற்கு 371 ரன் குவித்தது. 501 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய மத்திய மண்டலம், கடைசி நாளான நேற்று 221 ரன்னுகு ஆல் அவுட்டானது. ரிங்கு சிங் அதிகபட்சமாக 65 ரன், குமார் கார்த்திகேயா 39, அஷோக் மெனரியா 32 ரன் எடுத்தனர்.
மேற்கு பந்துவீச்சில் ஷாம்ஸ் முலானி 5, சிந்தன் கஜா 3, உனத்கட், அதித் சேத் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். சேலத்தில் நடந்த 2வது அரையிறுதியில் தென் மண்டலம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 630 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. வடக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 207 ரன்னுக்கு சுருண்டது. தென் மண்டலத்துக்காக விளையாடிய தமிழக வீரர் சாய்கிஷோர் 7 விக்கெட் அள்ளினார். 2வது இன்னிங்சில் தெற்கு மண்டலத்தின் ரவி தேஜா மீண்டும் சதம் விளாச, அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 316 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
740 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வடக்கு மண்டலம் 94 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் யஷ் துல் 59 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். தெற்கு மண்டலம் 645 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. சாய்கிஷோர், தியாகராஜன், கிருஷ்ணப்பா தலா 3 விக்கெட் எடுத்தனர். கோவையில் நாளை மறுநாள் தொடங்கும் பைனலில் (செப். 21-25) தெற்கு - மேற்கு மண்டல அணிகள் மோத உள்ளன.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
கடைசி ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - ஆஸி. சென்னையில் பலப்பரீட்சை: தொடரை வெல்லப்போவது யார்?
கிரிக்கெட் வழியே நட்புறவு...
விராட் கோலி நேரில் வந்து கேட்டுக்கொண்டதால் தான் 2017ல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன்: மனம் திறந்த சேவாக்
சூர்யகுமார் யாதவ் பயிற்சியாளருடன் ஆலோசிக்க வேண்டும்: கவாஸ்கர் பேட்டி
பேட்ஸ்மேன்களை மிரட்டும் வேகமுடையவர் உம்ரான்: இஷாந்த்-பிரெட்லீ பாராட்டு
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!