நுங்கம்பாக்கம், புழல் பகுதியில் கஞ்சா விற்ற 7 பேர் கைது
2022-09-18@ 00:31:58

சென்னை: நுங்கம்பாக்கம் மற்றும் புழல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில், இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி நுங்கம்பாக்கம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம், ஜெகநாதன் தெருவில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்து அவர்களை சோதனை செய்த போது, விற்பனைக்காக கஞ்சா மற்றும் போதைபொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த விஜயரோசன் (28), அண்ணாநகர், 5வது அவென்யூ பகுதியை சேர்ந்த தாமஸ் (27) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சா, மற்றும் 2 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், புழல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த புத்தகரம், புருஷோத்தமன்நகரை சேர்ந்த பிரவீன்குமார் (25), அதேபகுதியை சேர்ந்த ஹேமந்த் சிவனேஷ் (21), விக்ரம் (21), சாந்தகுமார் (19), கொளத்தூர், வேல்முருகன்நகர் கன்னியப்பன் (21), ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா, பணம், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு வலை
பலாத்காரம் செய்து ஆசிரியை கொலை ஏரிக்கரையில் நிர்வாணமாக புதைப்பு: 20 நாளுக்கு பிறகு ஆட்டோ டிரைவர் கைது
வேளச்சேரி தனியார் விடுதியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது
நாகப்பட்டினத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல் 3 பேர் கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி