கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
2022-09-18@ 00:29:31

சென்னை: சென்னை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அமிர்த ஜோதி தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் நாளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி நாளாக அறிவித்து உறுதி மொழியேற்க அறிவித்தார். அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது. அப்போது சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி, சமூக நீதி நாள் உறுதி மொழியான, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்.
சுயமரியாதை ஆளுமைத் திறனும், பகுத்தறிவுப்பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்’’ என்ற உறுதி மொழியை வாசித்தார். அதனை தொடர்ந்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்கள் உறுதி மொழியை ஏற்று கொண்டனர்.
மேலும் செய்திகள்
நிதிநிலை அறிக்கையில் ஊக்குவிக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் வேளாண்மை தொழில் புத்தாக்கம் பெறும்: தலைவர்கள் வரவேற்பு
ரூ.2.13 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் ராயபுரம் மாடிப்பூங்கா: விரைவில் திறக்க ஏற்பாடு
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சர்வதேச தரச்சான்று
கிண்டி மேம்பாலத்தில் விபத்து லாரியிலிருந்து டீசல் கசிந்து சாலையில் வழிந்தோடியது
மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
போரூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!