SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெரு நாய்களை விரட்ட துப்பாக்கியுடன் வீர நடை; போட்டவர் மீது வழக்கு

2022-09-18@ 00:21:19

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில மாதங்களாக தெரு நாய் தொல்லை மிகவும் அதிகரித்துள்ளது. சிறுவர், சிறுமிகள் உட்பட பலரை நாய்கள் பதம் பார்த்து வருகின்றன. நாய்கள் காரணமாக கேரளாவில் கடந்த ஒரு சில மாதங்களில் 21 பேர் பலியாகி உள்ளனர். நாய் தொல்லை அதிகரித்ததை  தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு அம்மாநில, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், காசர்கோடு அருகே உள்ள பேக்கல் பகுதியை சேர்ந்த சமீர் என்பவர் தன்னுடைய மகள் உள்பட அரபி பாடசாலையில் படிக்கும் மாணவ, மாணவிகளை தெரு நாய்கள் கடிக்காமல் தடுப்பதற்காக, அவர்களுக்கு பாதுகாப்பாக ரோட்டில் துப்பாக்கியுடன் சென்ற வீடியோ சமீபத்தில் வைரலானது.

நாய் தாக்க  வந்தால் அதை சுட்டுக் கொல்வேன் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக, சமீர் மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பற்றி சமீர் கூறுகையில், ‘என்னிடம் உள்ள ஏர்கன்  துப்பாக்கியால் நாயை சுட்டுக் கொல்ல முடியாது. குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது ஒரு தந்தையின் கடமை. என் மீது போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை, சட்டரீதியாக சந்திப்பேன்,’ என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

  • london-vertical-farm-29

    நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்