வக்பு வாரியத்தில் ஊழல் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
2022-09-17@ 02:26:04

புதுடெல்லி: வக்பு வாரிய ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானை லஞ்ச ஒழிப்புத்துறை (ஏசிபி) போலீசார் நேற்று கைது செய்தனர்.டெல்லி வக்பு வாரியத்தின் தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் ஓக்லா தொகுதி எம்எல்ஏ அமனதுல்லா கான் இருந்து வருகிறார். இவர், வக்பு வாரியத்திற்கு பணி நியமனம் செய்ததில் முறைகேடு செய்ததாக 2 ஆண்டுகளுக்கு முன்பாக பதிவு செய்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில், ரூ.12 லட்சம் ரொக்கம் , உரிமம் பெறாத துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, நேற்று நண்பகலில் விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, விசாரணைக்கு ஆஜரான அவரை, போலீசார் திடீரென கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருந்தாலும் கூட, அவற்றை சீனா பின்பற்றுவதில்லை: இந்திய ராணுவ தளபதி பேட்டி
இந்தியாவில் 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய மருந்து கட்டுப்பட்டு ஆணையம் உத்தரவு
இமாச்சலில் முதன் முறையாக இரண்டரை மாத குழந்தைக்கு ‘எச்3என்2’ தொற்று பாதிப்பு
மோடி படத்தை கிழித்த வழக்கு காங். எம்எல்ஏவுக்கு ரூ.99 அபராதம்: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு
இறுதி வாய்ப்பு: உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி.. உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்..!!
கேரளாவில் பெண்கள் வேடத்தில் ஆண்கள் பங்கேற்கும் வினோத திருவிழா: கொல்லம் அருகே கொட்டம்குளக்கரா தேவி கோயிலில் வழிபாடு
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!