குன்னூர் நகராட்சியில் மழை நீரில் பெயர்ந்த தார்சாலை ஜல்லி கற்கள்-பொதுமக்கள் வேதனை
2022-09-14@ 12:36:37

குன்னூர் : குன்னூர் நகராட்சியில், மாடல் ஹவுஸ் பகுதியில் நகராட்சி சார்பில் ரூ. 22 லட்சம் நிதியில் போடப்பட்ட தார் சாலையில் ஜல்லிக்கற்கள் மழைநீரில் பெயர்ந்ததை கண்டு அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர். குன்னூர் நகராட்சிக்கு உட்பட்டது 20வது வார்டு மாடல் ஹவுஸ் பகுதி. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பிரதான சாலை கடந்த சில நாட்களாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் டூவீலர்கள் மற்றும் ஆட்டோக்கள் அவ்வழியே செல்ல முடியாத அவலம் நிலவுகிறது. இந்நிலையில் அண்மையில் நகராட்சி சார்பில் ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரவோடு இரவாக சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்தது.
ஆனால் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சாலை முழுவதுமாக அடித்து செல்லப்பட்டு, ஜல்லி கற்கள் பெயர்ந்து விட்டது. இதையடுத்து இந்த தார் சாலை தரமின்றி போடப்பட்டுள்ளதாக, அப்பகுதி வார்டு உறுப்பினர் வசந்தி நகராட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டு தெரிவித்தார். இதையடுத்து, இதுபோல தரமற்ற சாலையை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீண்டும் மாடல் ஹவுஸ் பகுதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் மக்கள் வரிப்பணத்தை கொண்டு நகராட்சி சார்பில் பணிகள் நடக்கும்போது உரிய அதிகாரிகள் அருகில் இருந்து பணிகளை கண்காணிக்க வேண்டும். இத்தகைய தரமற்ற சாலையை இப்பகுதியில் அமைத்த ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நிதியை வழங்கக்கூடாது எனவும் சமூக ஆர்வலர்கள் குன்னூர் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!