ஆர்டிஐ மனுவுக்கு சாக்குபோக்கு பதில் மருந்து தர கட்டுப்பாடு அமைப்புக்கு நோட்டீஸ்
2022-09-14@ 00:33:00

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியாக பதில் அளிக்காத ஒன்றிய மருந்துகள் தர கட்டுப்பாடு அமைப்பிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய மருந்துகள் தர கட்டுப்பாடு அமைப்புக்கு சவுரவ் தாஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பிய மனுவில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கு உலக சுகாதார அமைப்பு தடை விதித்தது தொடர்பான விவரங்களை கேட்டார். இதற்கு பதில் அனுப்பிய மருந்துகள் தர கட்டுப்பாடு அமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரி, ‘நீங்கள் கேட்ட எந்த தகவல்களும் இல்லை’ என்று ஒற்றை வரியில் பதில் அனுப்பினார். இதனை தொடர்ந்து மனுதாரர், தலைமை தகவல் ஆணையத்திடம் புகார் செய்தார். இதன் அடிப்படையில். சரியான முறையில் பதில் அளிக்காத தகவல் தொடர்பு அதிகாரிகளை கண்டித்துள்ள தலைமை தகவல் ஆணையம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படியும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தகவலை மறுத்த காரணத்துக்காக ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் கேட்டுள்ளது.
Tags:
RTI Petition Excusable Reply Drug Quality Control Organisation Notice ஆர்டிஐ மனு சாக்குபோக்கு பதில் மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு நோட்டீஸ்மேலும் செய்திகள்
போலி ஆவணம் தாக்கல்: தனித்தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் எம்எல்ஏ பதவி ரத்து.! கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை: இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை
வங்கதேசத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 19 பேர் பலி
'தொடர் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுக' :அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் புதிய விதிமுறைகள் வெளியீடு!!
ராஜஸ்தானில் மாட்டு சாணத்தில் இருந்து காகிதம்
15 ஆண்டு பழமையான தனியார் வாகனங்களை அழிக்க விரைவில் கொள்கை
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!
தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!
துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!