இலங்கை கடற்படை கைது செய்த 6 மீனவர்கள் விடுதலை
2022-09-13@ 01:16:55

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஆக. 28ம் தேதி கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், 6 மீனவர்களையும் கைது செய்து ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்கள் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள் மற்றும் படகை மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறைக்காவல் முடிந்த நிலையில் நேற்று மீண்டும் மீனவர்கள் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிமன்ற நீதிபதி, 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் சில தினங்களில் ராமேஸ்வரம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
திருத்துறைப்பூண்டி மனநல காப்பகத்தை சுகாதார துறை அதிகாரி ஆய்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி