கேரள பேரவை சபாநாயகராக ஷம்சீர் தேர்வு
2022-09-13@ 01:05:29

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவையில் புதிய சபாநாயகராக ஷம்சீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள சட்டசபை சபாநாயகராக இருந்த ராஜேஷ் உள்ளாட்சித் துறை அமைச்சராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதனால் சபாநாயகர் பதவி காலியானது. தொடர்ந்து புதிய சபாநாயகராக தலச்சேரி தொகுதி எம்எல்ஏவான ஷம்சீரை நியமிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கமிட்டி தீர்மானித்தது. இந்த நிலையில் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான சிறப்பு சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. இடது முன்னணி சார்பில் ஷம்சீரும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் அன்வர் சாதத்தும் போட்டியிட்டனர். இதில் ஷம்சீருக்கு 96 ஓட்டுகளும், அன்வர் சாதத்துக்கு 40 ஓட்டுகளும் கிடைத்தன. அதைத் தொடர்ந்து புதிய சபாநாயகராக ஷம்சீர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல்வர் பினராய் விஜயன் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
தீவிரவாத வழக்குகள் உள்பட இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன்: லாகூர் உயர்நீதிமன்றம் வழங்கியது
பஞ்சாப்பில் போலீசால் தேடப்படும் அம்ரித்பால்சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: பல்வேறு படங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டை
ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சமாதானம்
3வது முறையாக விசாரணைக்கு ஆஜர்கவிதாவின் செல்போன்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு
மக்களவையில் விவாதமின்றி துணைமானிய கோரிக்கை நிறைவேற்றம்
புதிதாக 699 பேருக்கு கொரோனா: மேலும் 2 பேர் உயிரிழப்பு
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!