நியூசி. ஏ அணியுடன் 2வது டெஸ்ட் இந்தியா ஏ 229/6
2022-09-10@ 01:43:09

ஹுப்பாளி: நியூசிலாந்து ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது), இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்துள்ளது. ஹூப்ளி, கர்நாடகா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2வது நாளான நேற்று டாஸ் வென்ற நியூசி. ஏ அணி முதலில் பந்துவீசியது. கேப்டன் பிரியங்க் பாஞ்சால், அபிமன்யு ஈஸ்வரன் இருவரும் இந்தியா ஏ இன்னிங்சை தொடங்கினர். ஈஸ்வரன் 22 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த ருதுராஜ் கெயிக்வாட் 5 ரன், ரஜத் பத்திதார் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.
திலக் வர்மா டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, இந்தியா ஏ 68 ரன்னுக்கு 4 விக்கெட் விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், பிரியங்க் - கர் பரத் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்தது. பிரியங்க் 87 ரன் (148 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூர் 26 ரன் எடுத்து வெளியேற, 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ அணி 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்துள்ளது. கர் பரத் 74 ரன், ராகுல் சஹார் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.
மேலும் செய்திகள்
மெஸ்ஸி: 100
மயாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜெஸ்ஸிகா
சில்லி பாயிண்ட்ஸ்
பும்ராவுக்கு மாற்று வீரரை விரைவில் முடிவு செய்வோம்...: எம்ஐ கேப்டன் ரோகித் நம்பிக்கை
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் வேறு நாட்டில் நடத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்: வாசிம் கான் தகவல்
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் அப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!