SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவள்ளூர் குமரவேல் நகரில் ஸ்ரீசர்வ சாய்பாபா ஆலய கும்பாபிஷேக விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

2022-09-10@ 01:27:24

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஜெயா நகர் விரிவாக்கம், குமரவேல் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசர்வ சாய்பாபா ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் நாளான நேற்று 8.9.22 கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கிராம தேவதா வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் சாய்பாபா விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அனுக் விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ப்ரவேசபலி, மிருத்சங்கரஹனம், அங்குரார்பணம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, சுவாமிக்கு தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை விஷேச சந்தி, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஸ்பர்ஸாஹீதி, பூர்ணாஹூதியும், தீபாராதனையும், யாத்ரா தானம், கடம் புறப்பாடும் நடைபெற்றது. பின்னர், விமான கலசத்தில் புனித நீரை ஊற்ற கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து மூலவர் சாய்பாபாவிற்கு கும்பாபிஷேகமும் பூஜையுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் வ.ராஜவேல், வட்டாட்சியர் மதியழகன், முன்னாள் நகர மன்ற தலைவர்கள் பொன்.பாண்டியன், கமாண்டோ ஏ.பாஸ்கரன், துணைத்தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், தி.ஆ.கமலக்கண்ணன், பாஜ நிர்வாகிகள் பூவை ஜெ.லோகநாதன், அஸ்வின் என்கிற ராஜசிம்மா மகேந்திரா, இரா கருணாகரன், ஆர்யா சீனிவாசன், டாக்டர் சுரேஷ் மற்றும் திருவள்ளூர், பெரியகுப்பம், மணவாளநகர், காக்களூர், ஈக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம், பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்