எஸ்.பி.வேலுமணி மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு
2022-09-09@ 16:01:30

சென்னை: எஸ்.பி.வேலுமணி மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் அரசின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முதலில் புகார் அளித்து இருந்தனர். மேலும், கோவை லஞ்ச ஒழிப்பு துறையினர் தங்களிடம் உள்ள ஆதராங்களின் அடிப்படையில் எஸ்பி வேலுமணி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் (டிவிஏசி), தனக்கு எதிராக பதிவு செய்த 2 முதல் தகவல் அறிக்கைகளை (எப்ஐஆர்) ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்; வேலுமணி வழக்கில் ஐகோர்ட் உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செலுத்துள்ளோம். உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளதால் உயர்நீதிமன்றம் தற்போது விசாரிப்பது சரியாக இருக்காது.
அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று, வேலுமணி தொடர்ந்த் வழக்குகளை செப்.9ம் தேதிக்கு ஒத்திவைத்தது உத்தரவிட்டனர். மேலும் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நாளை மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
10,000 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி