SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனியார் பள்ளி மாணவன் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட விவகாரம்: அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

2022-09-09@ 14:07:12

புதுச்சேரி: காரைக்காலில் தனியார் பள்ளி மாணவன், சக மாணவியின் தாயாரால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இந்நிலையில் தற்போது காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜி-ஐ சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

கடந்த 2-ம் தேதி காரைக்கால் மாவட்டம் நேரு நகர் பகுதியை சேர்ந்த பால மணிகண்டம் என்ற 8-ம் வகுப்பு மாணவனை, அவருடன் படிக்கும் சக மாணவியின் தாயார் குளிர்பானத்தில் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சித்தார். இதனை தொடர்ந்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் அந்த மாணவன் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாமல் மறுநாள் நள்ளிரவில் அந்த மாணவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த 6-ம் தேதி புதுச்சேரி அரசு 3 மருத்துவர்களை கொண்ட மருத்துவக்குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கையானது நேற்று சுகாதாரத்துறை செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை தொடந்து துறை அமைச்சரான சுகாதாரத்துறை அமைச்சரான முதலமைச்சர் ரங்கசாமி இன்று காலை சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் செயலாளரை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து மாணவன் உயிரிழந்த போது பணியில் இருந்த மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை தொடர்பாக கூறப்படும் புகார்கள் குறித்த கோப்புகள் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டிய ஊழியர்கள் 42 பேர் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பிற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்