எங்கிருந்தாலும் ஆலோசனை பெறலாம் கண் நோயாளிகளுக்கு உதவி செய்ய செயலி: டெல்லி எய்ம்ஸ் அறிவிப்பு
2022-09-09@ 01:05:24

புதுடெல்லி: கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளின் வசதிக்காக புதிய செயலியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கி வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கண் நோய் சிகிச்சை பிரிவு தலைவர் டிட்டியால் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் உள்ள கண் நோயாளிகள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்காக புதிய ஆப் (செயலி) உருவாக்கப்பட்டு வருகிறது. கண் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகளை கண்டறிந்து அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் இது உதவும். தொலை துார பகுதிகளில் இருக்கும் நோயாளிகள் எப்பொழுதும் மருத்துவர்களை நேரில் சந்தித்து பேசுவது கடினம். இதன் மூலம், மருத்துவர்கள் நோயாளிகளுடன் நேரிடியாக கலந்துரையாடலாம். இதில் உள்ள கேமரா உதவியுடன் நோயாளிகள் தங்களுடைய கண்களின் படத்தை அனுப்பி தங்கள் பிரச்னைகள் குறித்து மருத்துவர்களிடம் பேச முடியும். இன்னும் 6 மாதத்தில் இந்த ஆப் அறிமுகப்படுத்தப்படும்,’’ என்றார்.
Tags:
Consultancy Ophthalmology Assist App Delhi AIIMS ஆலோசனை கண் நோயாளி உதவி செய்ய செயலி டெல்லி எய்ம்ஸ்மேலும் செய்திகள்
2024 மக்களவை தேர்தல் மம்தா பானர்ஜியுடன் குமாரசாமி ஆலோசனை
வாரணாசியில் மோடி அறிவிப்பு 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
பாஜ, காங்கிரஸ் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது
புதிதாக 1249 பேருக்கு கொரோனா
ஒன்றிய அரசுக்கு எதிரான 14 எதிர்க்கட்சிகள் மனு ஏப்.5ல் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
அதானி விவகாரத்தில் விசாரணை கேட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி 40 எம்பிக்கள் அதிரடி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி