உக்ரைனில் படித்தவர்கள் வேறு நாட்டில் படிக்கலாம்: மருத்துவ ஆணையம் அனுமதி
2022-09-08@ 01:09:02

புதுடெல்லி: ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 6 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இதனால், உக்ரைனில் மருத்துவம் படித்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடு திரும்பினார்கள். இவர்கள் இன்னும் உக்ரைன் செல்லவில்லை. இதனால், இவர்கள் படிப்பை தொடர்வது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்டத்தின்படி, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களின் படிப்பை முடித்து விட்டு ஒரே பல்கலைக் கழகத்தில் மட்டுமே பட்டம் பெற வேண்டும். இதன் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் வேறு பல்கலைக் கழகங்களுக்கும் சென்று தங்களின் படிப்பை தொடர முடியாத நிலை நீடித்து வந்தது.
இந்நிலையில், இந்த மாணவர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள பிற பல்கலைக் கழங்களுக்கு தற்காலிக சென்று படிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி இந்த ஒப்புதலை அது அளித்துள்ளது. மற்ற நாட்டு பல்கலைக் கழகங்களில் இவர்கள் படித்தாலும், உக்ரைன் பல்கலைக் கழகம் பட்டம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வெறுப்பு பேச்சு முடிவுக்கு வர அரசியலில் மதத்தை பயன்படுத்த கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை
நாளை மறுநாள் முதல் 1000 மருந்துகள் விலை 11% உயர்கிறது
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்: வன பாதுகாப்பு திருத்த மசோதா தாக்கல்
வெளிநாடுகளில் இருந்து தமிழ் நாடு என்ஜி ஓக்களுக்கு 3 ஆண்டில் ரூ. 6804 கோடி நிதி: ஒன்றிய அரசு தகவல்
கூகுளுக்கு ரூ. 1,337 கோடி அபராதம்: கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு
கிரிமினல் வழக்கில் உயர் நீதிமன்ற தடை எதிரொலி லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் வாபஸ்: மக்களவை செயலகம் அறிவிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!