புழல் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கிய 55 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; கடத்தல்காரர்களுக்கு போலீஸ் வலை
2022-09-07@ 01:31:18

புழல்: புழல் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கிய 55 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி கடத்திய கடத்தல்காரர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
புழல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டிஜிபி ஆபாஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஜிபி ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில், எஸ்பி கீதா, டிஎஸ்பி நாகராஜன் வழிகாட்டுதலில் ஆய்வாளர் சுந்தராம்பாள் தலைமையிலான குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ராம்நகர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டு ஆந்திராவிற்கு கடத்துவதற்கு தயாராக இருந்தது. மேலும் குடோன் முழுவதும் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆந்திராவிற்கு கடத்துவதற்காக பதுக்கிய 55 டன் ரேஷன் அரிசி மற்றும் 3 லாரிகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசியை கடத்த முயன்ற ஜோஷ்வா மற்றும் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அழைப்பு!
பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் மேலும் ஒருவர் கைது; 700 கிராம் தங்கம் பறிமுதல்
தந்தை சுப்பிரமணியம் மறைவை அடுத்து நடிகர் அஜீத்துக்கு நேரில் ஆறுதல் கூறினார் நடிகர் விஜய்
திமுக - அதிமுக இடையேதான் போட்டி என சட்டப்பேரவையில் கே.பி.முனுசாமி பேச்சு..!!
நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்கலாம்: தலைமை செயலாளர் இறையன்பு தகவல்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!