சோழவரம் அருகே குளத்தை ஆக்கிரமித்து சாலை
2022-09-07@ 01:30:15

புழல்: சோழவரம் அருகே குளத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சோழவரம் ஒன்றியம் ஞாயிறு முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட பசுவன்பாளையம் கிராமத்தில் சத்திரகுளம் உள்ளது. இந்த குளத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, ஞாயிறு கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் அளவீடு செய்து, ‘‘இங்கு யாரும் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது.
ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என்று அறிவிப்பு பலகை வைத்தனர். அதையும் மீறி தனியார் நிறுவனத்தினர் இந்த குளத்தின் கரைகளை உடைத்து சாலை அமைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3 வது இடம்: மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் தகவல்
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநருக்கு இன்று அனுப்பி வைப்பு
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை நாடாளுமன்றம் தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை: வைகோ கண்டனம்!
உடன்குடி பணியாளர் தற்கொலை சம்பவத்தில் வழக்கு பதிவு, விஷவாயு தாக்கி உயிரிழப்பது தடுக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!
பரத நாட்டிய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதா? தனியார் அறக்கட்டளை இயக்குநர் டிஜிபியிடம் விளக்கம்: தேசிய மகளிர் ஆணையம் புகாரால் பரபரப்பு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!