தேச விரோத செயல்கள் நடப்பதாக மதரசாவை இடித்த மக்கள்: வடமாநிலத்தில் தொடரும் சம்பவம்
2022-09-07@ 00:19:00

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் கோல்பாரா மாவட்டத்தில் பகியுரா சர் பகுதியில் மதரசா இயங்கி வந்தது. இதனையொட்டி வீடும் அமைந்திருந்தது. இந்த மதரசாவை வங்கதேசத்தை சேர்ந்த 2 நபர்கள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தகவலின்பேரில் மதரசாவின் மத குரு ஜலாலுதீன் ஷேக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தான் 2 வங்கதேசத்தினரை இங்கு ஆசிரியர்களாக நியமித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் ஜிகாதிகள் மூலமாக நாட்டுக்கு எதிராக தேசவிரோத செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்போது இருவரும் தலைமறைவாகி உள்ளனர். இந்த தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் ஆத்திரமடைந்தனர். மதரசாவிற்கு எதிராக ஒன்று திரண்ட அவர்கள் அதனை இடித்து தரைமட்டமாக்கினர். மேலும் அதனோடு சேர்ந்து இருந்த வீடும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலத்தில் இடிக்கப்படும் நான்காவது மதரசா இதுவாகும்.
விசாரிக்க வேண்டும்: இதற்கிடையே, தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் இக்பால் சிங் லால்புராவிற்கு அசாம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுதியுள்ள கடிதத்தில், மதரசா இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
Tags:
Anti-national activities Madrasa Iditha people North state தேச விரோத செயல்கள் மதரசா இடித்த மக்கள் வடமாநிலத்தில்மேலும் செய்திகள்
ஒன்றிய அரசு உத்தரவால் டெல்லி பட்ஜெட் தாக்கல் நிறுத்திவைப்பு: முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
கவிதாவிடம் 10 மணிநேரம் அமலாக்கத்துறை விசாரணை
போலி சாதி சான்று தாக்கல் செய்த மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பதவி ரத்து: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தொடர்ந்து 6வது நாளாக ஒத்திவைப்பு பாஜ எம்பிக்கள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: அதானி விவகாரத்தை திசைதிருப்பும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ஒன்றிய அரசு சார்பில் சீலிட்ட உறையில் தாக்கல் செய்த பதிலை ஏற்க மறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி
போலீஸ், வழக்குகள் மூலம் என்னை மிரட்ட முடியாது: ராகுல்காந்தி ஆவேசம்
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!