வேம்புலி அம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா துவக்கம்
2022-09-04@ 15:09:50

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள வேம்புலி அம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா துவங்கியது. திருவள்ளூரில் உள்ள ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாகிய ஸ்ரீ வேம்புலி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் யாத்திரை உற்சவம் தொடங்கியது. இதையொட்டி கடந்த 2ம் தேதி அபிஷேகம், அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.
விழாவின் இறுதி நாளான 11ம் தேதி காலை 7 மணிக்கு அபிஷேகம், புஷ்ப அலங்காரம் மற்றும் இரவு அம்மன் வீதி உலா புறப்பாடு நடைபெற உள்ளது. இந்த ஜாத்திரை விழாவை முன்னிட்டு சிறப்பு தாரை, தப்பட்டை, திருப்பதி பேண்ட் வாத்தியம் மற்றும் வாணவேடிக்கையும் பொய்க்கால் குதிரை நையாண்டி மேளம் கரகாட்டம், கேரள செண்டை மேளம் காஞ்சி கைச் சிலம்புடன் நடைபெற உள்ளது.
ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு தினமும் பகல் 12 மணியளவில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் வேம்புலி அம்மன் சேவை சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்து உள்ளனர்.
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் கோவை குணா மறைவு
பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை
பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!