கால்பந்து கூட்டமைப்பு தலைவராக சவுபே தேர்வு
2022-09-03@ 00:20:28

புதுடெல்லி: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஐஎப்) தலைவராக இந்திய அணி முன்னாள் கோல் கீப்பர் கல்யாண் சவுபே (45 வயது) தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் கேப்டன் பைசுங் பூட்டியாவுடன் போட்டியிட்ட கல்யாண் சவுபே 33-1 என்ற கணக்கில் மாநில கால்பந்து சங்க உறுப்பினர்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கி தோல்வியைத் தழுவினார். இந்திய அணியில் கோல் கீப்பராக இவர் இடம் பெற்றிருந்தாலும், சீனியர் அணிக்காக ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யு-17, யு-21 அணிகளுக்காகவும், பிரபல கால்பந்து கிளப் அணிகளான மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்காகவும் கோல் கீப்பராக செயல்பட்டுள்ளார். 85 ஆண்டு ஏஐஐஎப் வரலாற்றில் தலைவர் பொறுப்பை ஏற்கும் முதல் கால்பந்து வீரர் இவர் தான். இதற்கு முன் தலைவர்களாக இருந்த பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி, பிரபுல் படேல் முழு நேர அரசியல்வாதிகள் ஆவர்.
மேலும் செய்திகள்
மெஸ்ஸி: 100
மயாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜெஸ்ஸிகா
சில்லி பாயிண்ட்ஸ்
பும்ராவுக்கு மாற்று வீரரை விரைவில் முடிவு செய்வோம்...: எம்ஐ கேப்டன் ரோகித் நம்பிக்கை
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் வேறு நாட்டில் நடத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்: வாசிம் கான் தகவல்
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் அப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!