வாக்காளர் அட்டை- ஆதார் இணைப்பு; வரும் 4ம் தேதி சிறப்பு முகாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
2022-09-02@ 18:48:37

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த 1.8.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் 4.9.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இந்தச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6பி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி விவரங்களை வழங்கியவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் மேலும் ஒருவர் கைது; 700 கிராம் தங்கம் பறிமுதல்
தந்தை சுப்பிரமணியம் மறைவை அடுத்து நடிகர் அஜீத்துக்கு நேரில் ஆறுதல் கூறினார் நடிகர் விஜய்
திமுக - அதிமுக இடையேதான் போட்டி என சட்டப்பேரவையில் கே.பி.முனுசாமி பேச்சு..!!
நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்கலாம்: தலைமை செயலாளர் இறையன்பு தகவல்
விவசாயிகளிடம் இருந்து தேவைக்கு அதிகமான நிலத்தை அரசு ஒருபோதும் கையகப்படுத்தாது: என்.எல்.சி விவகாரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது: அமைச்சர் பொன்முடி தகவல்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!