SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இன்று இந்தியாவில் அறிமுகம்

2022-09-01@ 09:35:39

டெல்லி: பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒன்றிய உயிரி தொழில்நுட்பத் துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்கின்றன.

சமீப காலங்களாக, பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கருப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் அதிக அளவியல் ஏற்பட்டு வருகிறது. இதில் கருப்பை வாயில் தொற்று ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் போது கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்துவிட முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்,கருப்பை வாய் புற்றுநோயை வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்த நாள் வரை, கருப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது, கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து தடுப்பூசிக்கான சோதனைகள் செப்டம்பர் 2018-ம் ஆண்டு இந்தியாவின் 12 இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜூன் 8-ம் தேதியன்று தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த தடுப்பூசி மூலம் கருப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி ஏற்படுவதை தடுக்க முடியும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியால் இனி வரும் காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பதிப்பில் இருந்து பெண்கள் காக்கப்பட வாய்ப்புள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்