SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜி.கே.மூப்பனார் 21-வது நினைவு நாள்; கட்சி தலைவர்கள் மரியாதை

2022-08-31@ 00:55:37

சென்னை:  தமாகா நிறுவன தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 21ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து நினைவிடத்துக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், புதுச்சேரி, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன், கரு நாகராஜன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், ஐஜேகே ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதை தெடார்ந்து, தமாகா மாநில பொது செயலாளர் விடியல் சேகர், சக்தி வடிவேல், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், அசோகன், மாநில ெபாது செயலாளர் ஜவஹர்பாபு, மாநில செயலாளர் பாலசந்தானம், தி.நகர் கோதண்டன், ராஜன் எம்.பி.நாதன், இளைஞர் அணி தலைவர் யுவராஜா, மாவட்ட பொருளாளர் கிண்டி மம்மு, வர்த்தகர் அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், சி.பிஜூ  கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்