சசிகலாவை சிறையில் தள்ளி அரசியல் அனாதை ஆக்கியவர் ஓபிஎஸ்: அய்யப்பன் அணி தாவலால் பாதிப்பு இல்லை என உதயகுமார் ஆவேசம்
2022-08-29@ 01:56:50

மதுரை: சசிகலாவை சிறையில் தள்ளி அரசியல் அனாதை ஆக்கியவர் ஓபிஎஸ் என உதயகுமார் கூறியுள்ளார்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ அய்யப்பன். இவர் முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் தீவிர விசுவாசி. உதயகுமாருடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த அய்யப்பன், நேற்று முன்தினம் திடீரென ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவினார். இது மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் உதயகுமார் எம்எல்ஏ நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அனைத்து சித்து விளையாட்டுகளையும் செய்யக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் 2001ல் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போதுதான் ஜெயலலிதாவுக்கு ஆபத்து வந்தது. அந்த ஆபத்து என்ன என்பது ஓபிஎஸ் மனசாட்சிக்கு தெரியும். மூன்றுமுறை முதலமைச்சராக இருந்தேன் என மார்தட்டிக்கொள்ளும் அவர், சுயநலத்தின் மொத்த உருவம். ஓபிஎஸ் முதல்வராக வர பரிந்துரை செய்த டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து அப்புறப்படுத்தினார்.
ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது’’ என்றெல்லாம் கூறி அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவிற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ். அதிமுக, தனக்கும், தவது பிள்ளைக்கும் குடும்பச்சொத்தாக வேண்டும் என்பதற்காகவே அவர் நாடகம் நடத்துகிறார்.ஓபிஎஸ்சின் சித்து விளையாட்டில், ஜெயலலிதா கூட தப்பமுடியாமல் கடைசியில் முதலமைச்சர் பதவியை ஓபிஎஸ்சிடம் ஒப்படைக்கும் நிலையை ஏற்படுத்தினார்.சசிகலாவை சிறையில் தள்ளி அரசியல் அனாதை ஆக்கியவர் இந்த ஓபிஎஸ்தான். சுயநல அரசியலில் மொத்த உருவம். தனக்கு பதவி இல்லையெனில் கட்சியை அழிக்கவும் தயாராகிவிடுவார்.
என்னுடன் அரசியல் பயணம் செய்த அய்யப்பனை உசிலம்பட்டி தொகுதியில் வேட்பாளராக நான் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரை செய்தேன். அப்போது ஓபிஎஸ் இந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கவேண்டும் எனக்கூறி அவருக்கு சீட் தர மறுத்தார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி கமிஷனின் இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ், துணை முதலமைச்சராக இருந்தபோது, 7 முறை நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பினார். ஒருமுறை கூட நீதிபதி முன்பு ஆஜராகி சாட்சி சொல்ல முன்வரவில்லை. பதவி போன பின்பு எட்டாவது முறையாக ஆஜராகி அந்தர்பல்டியாக மாற்று கருத்துகளை கூறினார். ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவித்த அய்யப்பனால், அதிமுகவிற்கு எந்த பின்னடைவும் இல்லை என்றார்.
மேலும் செய்திகள்
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
சோழவரம் ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு
ஊத்துக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!