செங்கல்பட்டு நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
2022-08-27@ 19:36:55

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும் வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இதனால் நகரில் நாளொன்றுக்கு 20 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் 10 டன் நெகிழிகளின் கழிவாக உள்ளது. குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் கழிவு பொருட்கள் சாலையோரங்களில் கொட்டப்படுகிறது.
இவைகளை சேகரித்து தரம் பிரிக்காமல் துப்புரவு பணியாளர்கள் பச்சையம்மன் கோயில் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதனால் பல டன் குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. தரம் பிரிக்காத குப்பையால் உரம் தயாரிக்கும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது. இதனால் குப்பை தரம் பிரித்து குப்பை கிடங்கில் கொட்ட வேண்டும் என நகராட்சி நிர்வாகம், துப்புரவு ஊழியர்களிடம் கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் துப்புரவு ஊழியர்கள் இன்று காலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகள்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
திருத்துறைப்பூண்டி மனநல காப்பகத்தை சுகாதார துறை அதிகாரி ஆய்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி