திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் புதிய நூலக கட்டிடம்; செல்வம் எம்பி அடிக்கல் நாட்டினார்
2022-08-27@ 01:48:02

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் கட்டிடத்திற்கு எம்.பி.செல்வம் அடிக்கல் நாட்டினார். திருக்கழுக்குன்றம் மலையடிவாரம் பகுதியில் கடந்த 1962ம் ஆண்டு நூலகம் துவங்கப்பட்டது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை கொண்டு நூலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், பழமையான அடிப்படை வசதிகளற்ற கட்டிடம் என்பதால் கட்டிடத்தின் மேற்கூரைகள் இடிந்தும், பக்கவாட்டு சுவர்கள் இடிந்தும், ஜன்னல், கதவுகள் சேதமாகி விட்டதால், மழைக்காலங்களில் கட்டிடத்தின் உள்ளே மழை நீர் ஒழுகி நூலகத்தின் புத்தகங்கள் நனைந்து சேதமாகி விடுகிறது. மேலும், பழமையான நூலக கட்டிடத்தை சுற்றி முட்புதர்கள் அடர்ந்து காணப்பட்டதால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களும் நூலகத்தில் படையெடுக்கிறது. இந்த நூலகம் இயங்கி வந்த நிலையில், இந்த நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என வாசகர்களும்,
பொது மக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், புதிய நூலக கட்டிடம் கட்ட ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எ.ல்ஏ வீ.தமிழ்மணி முன்னிலை வகித்தார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், துணை தலைவர் வீ.அருள்மணி, மாவட்ட நூலக அலுவலர் மந்திரம், மாவட்ட கவுன்சிலர்
ஆர்.கே.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கச்சிராயபாளையத்தில் தொடரும் அவலம் அதிகாரிகள் அலட்சியத்தால் பாலம் கட்டும் பணி மந்தம்
காலமுறை ஊதியம் வழங்க கோரி ஊட்டியில் பூங்கா ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்-மலர் கண்காட்சி பராமரிப்பு பணிகள் பாதிக்க வாய்ப்பு
சீர்காழி அருகே பாலத்தில் இருபுறமும் இணைப்புச் சாலைகள் அமைக்காததால் மீனவ கிராம மக்கள் அவதி-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் சாலை விரிவாக்க பணிகளை தொடங்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்
குடிநீர் வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்
திருவாடானை பகுதியில் ஆயிரம் ஆண்டு கல்வெட்டுக்களை பாதுகாக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!